எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம்
இந்தியவின் கேரள மாநிலம் கொல்லம் நகரத்தில் உள்ளதுஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம் என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொல்லம் (குயிலன்) நகரில் அமைந்துள்ள ஒரு கலைக்கூடம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகும். கொல்லம் நகரில் உள்ள முதல் சர்வதேச தரமான கலை ரசனையில் அமைந்த சிற்றுண்டியகமாகக் கருதப்படுகிறது. ஆசிரம பிக்னிக் கிராம வளாகத்திற்குள் 'பாரம்பர்யா' என்ற புனரமைக்கப்பட்ட பாரம்பரியக் கட்டிடத்தில் இந்த சிற்றுண்டியகம் அமைந்துள்ளது. பிரபல ஓவியக் கலைரும் கலை இயக்குநருமான ஷென்லி இந்த கலை சிற்றுண்டிச் சாலையை அமைப்பதற்காக கொல்லம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் அமைப்பிடமிருந்து பாரம்பர்யா கட்டிடத்தை ஐந்து ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டார். கொல்லம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் பாரம்பர்யா கட்டிடத்தில் உள்ள சொத்துக்களை புதுப்பித்தல் மற்றும் அமைத்து சீர் செய்தல் பணிகளுக்காக கிட்டத்தட்ட 2 மில்லியன் இந்திய ரூபாயை செலவிட்டுள்ளது.





